குருணாகல் ரிதிகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெலகெதர பகுதியில் கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கிணற்றில் சடலம் கிடப்பதை அவதானித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து கிணற்றிலிருந்து சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்தநிலையில், நீதவானின் உத்தரவின் பேரில் சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்