காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞன்

இந்தியாவில் காதலை ஏற்றக்கொள்ள மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் எஸ் ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சுரேஷின் காதலுக்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார் . ஆனாலும் அந்த இளம் பெண்ணை தன்னை காதலிக்குமாறு அந்த வாலிபர் வற்புறுத்தி இருக்கிறார்.

அந்த பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததன் காரணமாக கோபம் அடைந்த சுரேஷ் நேற்று திங்கட்கிழமை மாலை மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அந்த பெண்ணை தடுத்து கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதனை கண்ட பொதுமக்கள் குறித்த இளைஞரை தடுத்து நிறுத்தி படுகாயம் அடைந்த அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞன் சுரேஷை பிடித்து அடி கொடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சுரேஷை கைது செய்துள்ள பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.