தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதால் ஆங்காங்கே காடுகளுக்கு தீ மூட்டும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காடுகளுக்கு தீ மூட்டுவது சட்டப்படி பாரிய குற்றமாகும். எனவே, தீ மூட்டும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 055 2288222 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் தகவல் வழங்கும் நபர்கள் தொடர்பில் இரகசியம் பாதுகாக்கப்படுமெனவும் அவர்களுக்கான பணப்பரிசில்களும் வழங்கப்படுமெனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்