-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில், விமானத்தை தாக்கும் வெடி குண்டுகளின் பாகங்கள் பல, இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் இராணுவ முகாமின் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கு, கிடங்கு வெட்டியபோது குறித்த பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.
மோப்ப நாயின் உதவியுடன், பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் பங்குபற்றுதலுடன் குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டன.
இதன்போது, விமானத்தை தாக்கும் ஏவுகணையின் 22 பாகங்கள் மீட்கப்பட்டன. அத்துடன் இனந்தெரியாத வெடிபொருட்களின் பாகங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










