களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி அறையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஏற்பட்ட இத்தீவிபத்தினால் குறித்த அறையிலிருந்த மாணவிகளின் அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அறைக்குள் மாணவர்கள் எவரும் இருந்திருக்கவில்லை.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தீயைக் கட்டுப்படுத்துவதற்காகத் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.










