முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தேவிபுரம் பகுதியினை சேர்ந்த புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்துவரும் விநாயகம் என்று அழைக்கப்படும் சி.சிவபாஸ்கரன் (வயது – 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இவர் நேற்று மாலை கள்ளினை இறக்கி தவறணையில் கொடுத்துவிட்டு திரும்பும் வழியில் தேவிபுரம் பகுதியில் உள்ள வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கட்டையில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதனை தொடர்ந்து படுகாயமடைந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்