ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலடி தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
தங்கப் படிமம் ஷான்டாங் மாகாணத்தின் லைஷோ கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. சீனாவின் நீண்டகால கனிம ஆய்வுத் திட்டத்தின் மூலம் இந்த தங்க படிமம் கண்டுபிடிக்கப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
மேலும், கடலுக்கு அடியில் தங்கம் இருக்க கூடிய தேக்கிடம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ஆய்வுகள் மூலம் இங்கு 562 டன் உறுதிப்படுத்தப்பட்ட தங்க இருப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இங்கு ஒரு டன் தாதுவுக்கு சராசரியாக 4.2 கிராம் தங்கம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.