தங்காலை பகுதியில் கடலில் மிதந்த போத்தலில் காணப்பட்ட திரவத்தை மதுபானம் எனக் கருதி அதனைப் பருகிய 6 மீனவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இந்த மீனவர்கள் 6 பேரும் நேற்று இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற போதே இந்த திரவத்தை அருந்தியுள்ளனர்.
ஆறு பேரில் நால்வர் உயிரிழந்ததோடு, ஏனைய மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்