அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கி இளைஞர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த சுஜீவ பிரியலால் (வயது – 27) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
நான்கு நண்பர்களுடன் இன்று சனிக்கிழமை பிற்பகல் அம்பாந்தோட்டைக் கடலில் குளித்தபோதே குறித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் ஏனைய 4 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலம் மாலை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .