-பதுளை நிருபர்-
கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் எல்டப் மேற் பிரிவைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று தேடுதலை மேற்கொண்ட போது குறித்த நபரின் வீட்டுக்கு பின் புறத்தில் கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டு இருந்த ஒரு லட்சத்து முப்பதாயிரம் மில்லி லிற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெரல் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்