ஹபராதுவை – பிடிதுவ பகுதியில் 86 மற்றும் 81 வயதுடைய சகோதரிகள் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் திருமணமாகாத சகோதரிகள் எனவும், இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியைகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் பிடிதுவ பகுதியில் பெரிய காணியொன்றில் அமைந்துள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இருவரின் சடலங்களும் அவர்களது வீட்டின் பின்புறத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இரட்டைக் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹபராதுவை பொலிஸாரும் காலி பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










