ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி : எமனாக மாறிய பூனை அதிர்ச்சியில் கிராம மக்கள்

இந்தியா- மகாராஷ்டிரா மாநிலத்தின் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்க முயற்சித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் பகுதியில் இருக்கும் வட்கி கிராமத்தில்; பாழடைந்த பழைய கிணற்றில்; கடந்த சில காலங்களாகவே தண்ணீர் இல்லை. மாறாக, விலங்குகளின் கழிவுகள் போடபட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் இந்த கிணற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பூனை ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கிணற்றுக்குள் குதித்து இருக்கிறார்கள்.

உள்ளே சென்ற நபர்கள் ஐவரும் திரும்பி வராததால் குடும்பத்தினர் குழப்பம் அடைந்த நிலையில் ஆறாவதாக ஒரு நபர் இடுப்பில் கயிறுடன் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.

கிணற்றுக்குள் இறங்கிய ஆறாவது நபருக்கு முதலில் சென்ற ஐந்து பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து இந்த ஆறாவது நபர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். மேலும் இவருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புழக்கத்தில் இல்லாத அந்த கிணற்றுக்குள் (பயோ கேஸ்) உயிரி எரிவாயு இருந்துள்ளது. இந்த கிணறு பயோ கேஸ் (bio Gas)குழியாகவே பயன்படுத்தப்பட்ட வந்துள்ளது.

இந்த கிணற்றில் இருந்த விஷவாயு தாக்கியதிலேயே கிணற்றில் இறங்கிய அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் , மேலும் கிணற்றுக்குள் உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

பூனையை காப்பாற்ற சென்ற ஐவரின் உயிருக்கும் பூனை எமனாக மாறியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்