-அம்பாறை நிருபர்-
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான் சேனை பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஐஸ் போதை பொருளுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இறக்காமம் விசேட புலனாய்வு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 மில்லி 200 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் சந்தேக நபர்களான தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இறக்காமம் பொலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்