எல்ல, கித்தல் எல்ல பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற 27 வயதுடைய இத்தாலிய பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த பெண் தனது நண்பருடன் கித்தல் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றிருந்தபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்வீழ்ச்சிப் பகுதியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது குறித்த பெண் தவறி விழுந்து காயமடைந்ததாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து எல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










