எரிபொருளை சீராக விநியோகிப்பதற்காக தேசிய எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளத்தில் பதிவு செய்தவர்கள், எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்து கொள்ள விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, FUEL BAL இடைவெளி வாகன இலக்கம் (உதாரணமாக: ABC 1234) என டைப் செய்து 076 6220 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ் செய்தி அனுப்புவதன் மூலம் எரிபொருள் இருப்புத் தொகையை அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.