எரிபொருட்களின் விலைகள் குறைப்பு: புதிய விலை தொடர்பான விபரம்

 

சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் நேற்று செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டிருந்த நிலையில் சினோபெக் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அதன்படி, ஒக்டன் 92 வகை பெட்றோல் 3 ரூபாவால் குறைக்கப்பட்டு 365 ரூபாவாகவும், ஒக்டன் 95 வகை பெட்றோல் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 420 ரூபாவிற்கும், ஓட்டோ டீசல் 27 ரூபாவால் குறைக்கப்பட்டு 333 ரூபாவாற்கும், சுப்பர் டீசல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 377 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்