ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்குத் தீர்மானித்தால்இ அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவையும் வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
”தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது.
கட்சி சார்பில் வேட்பாளராக ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.
ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.
ஆனால் ஜனாதிபதி எம்முடன் செல்லத் தயாராக இருந்தால், நாங்கள் அவருக்கு முழுமையாக ஆதரவளிக்க நடவடிக்கை எடுப்போம்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்