தமக்கு இதுவரையில் பதவி அதிகாரம் கிடைக்கப்பெறாத நிலையில் தம்மையும் கடந்த கால ஜனாதிபதிகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டதாக டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
காலை 7.30 மணியளவில் எதிர்க்கட்சி அலுலகத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்