முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில், வேட்டையாட சென்ற ஒருவர், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
செபஸ்டியாம்பிள்ளை ரோஷன் இருதய தாஸ் (வயது 48) என்ற குடும்பஸ்தரே இச்சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு ஐந்தாம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த இருவர், உள்ளூர் துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற போது, அதில் ஒருவருடைய துப்பாக்கி தவறுதலாக பின்புறம் வெடித்ததில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர், முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.









