அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று திங்கட்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335 ரூபாயாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை கடந்த வெள்ளிக்கிழமை 325.74 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 326.00 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, டொலரின் விற்பனை விலை 334.80 ரூபாயிலிருந்து 335.08 ரூபாயாக அதிகரித்துள்ளது.










