திருகோணமலையில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஹக்கபட்டஸ் வெடி பொருட்களுடன் இன்று புதன் கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்மோட்டை டி-10 மணிபுர பகுதியைச் சேர்ந்த புஞ்சிபண்டாகே இந்திக சுகத் பண்டார (வயது – 31) எனவும் தெரியவருகிறது
புல்மோட்டை விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபோது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் எட்டு ஹக்கபட்டஸ் என்று அழைக்கப்படும் வாய் வெடிகளுடன் குறித்த சந்தேக நபரை கைது செய்ததாகவும் இதனையடுத்து புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்