பதுளை – மடூல்சீமை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 23 வயது இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 2 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் குறித்த இளைஞரை கொலை செய்து வீசிய இரு சந்தேக நபர்களையும் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போதே சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை சடலத்தை தேடும் பணி கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த போதும் நேற்றைய தினம் இராணுவத்தினரின் உதவியுடன் மடூல்சீமை பொலிஸார் இணைந்து தேடுதல் மேற்கொண்ட போது சடலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இருப்பினும் இன்றைய தினம் புதன்கிழமை பொலிஸார் இராணுவத்தினர் விசேட பயிற்சி பெற்ற இராணுவத்தினரின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்ட போது சடலம் 400 அடிக்கு கிழ் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக மடூல்சிமை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
