உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் 87 அமெரிக்க டொலர்களாக இருந்த டபிள்யூ.ரீ.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று வெள்ளிக்கிழமை 90.17 அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.

பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 96.18 அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது.