இந்த ஆண்டின் ஒக்டோபர் 29 வரையான காலப்பகுதிக்குள் 153,063 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 1,878,557 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 420,033 ஆகும்.
அத்துடன், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 174,021 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவில் இருந்து 132,594 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 115,938 சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் இருந்து 111,998 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.










