ஆசிரியர் சேவைக்கும் தொழிற்சங்க சேவைக்கும் பொருத்தம் இல்லாத ஆசிரியர் சங்க செயலாளர் பொ.உதயரூபனை அனைத்து பதவியிலிருந்தும் நீக்கும்படி கண்டன ஆர்பாட்டம் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று காலை 10 மணியளவில் ஆசிரியர் ஒருவரை தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் சங்கத்தினால் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்,
பொ. உதயரூபன் என்கிற தனி நபர் தன்னுடைய சுயலாபத்திற்காக கல்வி துறையினை பயன்படுத்தி அனைவரையும் இழிவுபடுத்துவதாகவும் கடந்த காலங்களில் தான் ஒரு படித்த சமூகம் என்பதை மறந்து முகநூலில் தேவையற்ற விமர்சனங்களை பரப்பியதாக தெரிவித்தனர்.
மேலும் சிறந்த அடைவுமட்டங்களை அடையும் வலையங்களை இவர் பாராட்டாமல் மாறாக குறைந்த அடைவுமட்டங்களை பெற்றால் அந்த வலையங்களை தனது முகநூலில் இவர் விமர்சிக்கின்றார் என்று குற்றம் சுமத்தியதுடன், எதிர் மறை மனப்பாங்குகளை கொண்ட இவர் கடந்த காலத்தில் தரம் 2 இல் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை தாக்கி உள்ளார் எனவே இவரை உடனடியாக அனைத்து பதவிகளிலும் இருந்து விலக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


