இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளைக் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணத்தை குறைத்ததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பிரைட் ரைஸ், கொத்து , உணவுப் பொதி ஆகியவற்றின் விலைகள் 25 ரூபாவினாலும், பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்