பாராளுமன்ற தேர்தலின் ஊடாக இம்முறை மட்டக்களப்பில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஊடாக இரண்டு பிரதிநிதிகளை நீங்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தால் மட்டக்களப்பில் துரித அபிவிருத்து நடக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் இடம் பெற்றபோதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமக்கு இம்முறை இருவரை மட்டக்களப்பில் இருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க உதவுவீர்களாக இருந்தால் இங்குள்ள முகத்துவாரத்தை அகலப்படுத்தி ஆழப்படுத்தித் தருவோம். அதன் ஊடாக இங்கு இருக்கும் மீனவர்கள் மிகுந்த நன்மையை அடையலாமென்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இதன் போது வேட்பாளர்களான தம்பிப்பிள்ளை சிவானந்த ராஜா மற்றும் அன்டனிசில் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் மீனவ சமூகத்தினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதுடன் தங்களது கருத்தினையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்