மத்திய காசாவில் நூற்றுக்கணக்கான அகதிகள் தங்கியிருந்த ஐக்கிய நாடுகளின் பாடசாலையொன்றின் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் ஹமாஸ் அமைப்பினரின் கூடாரமாகச் செயற்பட்ட பாடசாலையின் மீதே தாம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
நுசரத் ஏதிலிகள் முகாம் அமைந்துள்ள பாடசாலையின் மேல் தளத்தில் உள்ள வகுப்பறைகள் மீது, இஸ்ரேலிய போர் விமானம் 2 ஏவுகணைகளை வீசியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் குறைந்தது 27 பேர் வரையில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஊடக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்