
இஸ்ரேல் காசா யுத்தத்தில் 11 ஊடகவியலாளர்கள் இதுவரை பலி
இஸ்ரேலுக்கும் காசாவிற்கம் இடையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தில் இதுவரை குறைந்தது 11 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒன்பது பாலஸ்தீனியர்கள், ஒரு லெபனானியர் மற்றும் ஒரு இஸ்ரேலியர் உட்பட 11 பேர் இந்த வாரம் இறந்ததுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
ஒரு இஸ்ரேலிய ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் அல்லது அதற்கு அருகாமையில் கொல்லப்பட்ட, காயமடைந்த மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றிய கூடுதல் அறிக்கைகளை குழு ஆய்வு செய்கிறது. வெள்ளிக்கிழமை, லெபனானில் ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் சிக்கி ராய்ட்டர்ஸ் ஒளிப்பதிவாளர் கொல்லப்பட்டும் குறைந்தது ஆறு பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர் என்று குழு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் மத்திய கிழக்கிற்கான ஒருங்கிணைப்பாளர் ஷெரிப் மன்சூர், காசாவில் உள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் குடும்பங்களை வெளியேற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் துடிக்கும் போதும் கூட தகவல்களைப் பெற முயற்சிப்பதாகக் தெரிவித்தார்.
பலர் தங்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் இழந்துள்ள நிலையில் சிலர் மருத்துவமனையில் இருந்த வேலை செய்கிறார்கள், ஏனெனில் அவர்கள் மின்சாரம் மற்றும் இணையத்தைப் பெறக்கூடிய ஒரே இடமாக இதுவே தற்போது உள்ளதாக தெரிவித்தார்.
“பத்திரிகையாளர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள், ஆனால் அவர்கள் இப்போது மிகவும் அவசியமானவர்கள்” என்றும் “என்ன நடக்கிறது என்பதில் அவர்கள் எங்கள் கண்கள்” என்றும் மன்சூர் தெரிவித்துள்ளார்.