இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவை

-கிளிநொச்சி நிருபர்-

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் தண்டுவான்  (Mu/125) கிராம அலுவலர் பிரிவிலும், பெரியஇத்திமடு (Mu/126) கிராம அலுவலர் பிரிவிலும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வீட்டுப் பாவனையாளர்களுக்கான இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உத்தியோகத்தர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு வருகை தந்து இதற்கான விண்ணப்படிவங்களை வழங்கவுள்ளனர்.

எனவே விண்ணப்படிவங்களை பெற்றுக்கொள்கின்ற பொது மக்கள் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அவற்றினை பூர்த்தி செய்து எதிர்வரும் 02.08.2022 அன்று தண்டுவான் கிராம அலுவலர் அலுவலகத்தில் காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் இரண்டு மணிவரை கையளிக்க வேண்டும் எனவும், இச் சந்தர்ப்பத்தை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ளுமாறும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் கோரியுள்ளது.