திருகோணமலை வான் எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் ஒருவர் இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஜ எல, கந்தளாய் எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட 45 வயமுடைய ஒருவரே இலஞ்சம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.
கடந்த 15 ஆம் திகதி குறித்த பொலிஸ் அதிகாரி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை கடமை நேரத்தில் பரிசோதித்த போது உரிய ஆவணங்கள் இன்மையால் இலஞ்சமாக 10000 ரூபா தரும்படி கேட்டுள்ளார்.
அவ்வேளை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் உடனடியாக 5000 ரூபாவை கொடுத்து விட்டு மீதி தொகை 5000 ரூபாவை பிறகு தருவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, மிகுதி தொகையான 5000 ரூபாயை நேற்று வியாழக்கிழமை மாலை 7.20 மணியளவில் கொடுக்கும் போது, இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்