சென்னையில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதித் தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காட்சியில் தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை அகதிகளின் விற்பனையகங்களும் இடம்பெற்றிருந்தன.
இந் நிகழ்வில் பல காலமாக அகதிகளாக வாழும் இலங்கை மக்களை இரா.சாணக்கியன் சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,பாராளுமன்ற உறுப்பினர் அ.அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் என்போர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்