எரிபொருள் பெறுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து டோக்கன்களும் செல்லுபடியற்றவை எனவும், நாளை மறுதினம் வியாழக்கிழமை தேசிய எரிபொருள் உரிமத்தின் பதிவு (QR) வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும், எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி, 0, 1, 2 – திங்கள், வியாழன் ஆகிய நாட்களிலும், 3, 4, 5 – செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களிலும், 6, 7, 8, 9 – புதன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் வழங்கப்படும்