ஜனாதிபதி தேர்தலின் சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரச்சாரம் நாடளாவிய ரீதியில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்ப நடவடிக்கைகளை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்திருந்தது.
இதன்போது மட்டக்களப்பு சந்தை தொகுதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பிரதான பகுதிகளில் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்