-கிரான் நிருபர்-
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் 2024ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட 12.7மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இருந்து கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட சில தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் முன்பள்ளி பாடசாலைகள், மீனவர் சங்கம், விளையாட்டு கழகம் போன்றவற்றுக்கான உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது
பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் கோறளைப்பற்று மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் உதவி திட்டமில் பணிப்பாளர் ஆர் கங்காதரன், தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜிவரன், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.





மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
