கம்பஹா மாவட்டத்தில் இரத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
ஊரகஸ்மன்ஹந்திய, மெய்கஸ்பிட்டிய வீதிக்கு அருகில் உள்ள ஸ்டிக்கர் கடையிலேயே இரத்தக் காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கடையின் உரிமையாளரின் மனைவியான யமுனா நிரோஷினி (வயது – 41) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது கணவருடன் குறித்த கடையில் வசித்து வந்தவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்