இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
யாழ்ப்பாண மாவட்டத்திலும் மழை பெய்யும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.