இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இதற்கமைய, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபாய் 55 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபாய் 51 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 333 ரூபாய் 74 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 333 ரூபாய் 70 சதமாக காணப்பட்டது.