நாட்டில் இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 290 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தில் இருந்து பெறப்பட்டவை என அந்த அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.
கம்பஹா மற்றும் குருணாகல் மாவட்டங்களில் இருந்து அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும், இது போன்ற பல முறைப்பாடுகள் மாதந்தோறும் பெறப்படுவதாகவும், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்