ஆசிரியர் எம்.எம்.எம்.உவைஸ் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-

விஞ்ஞான பாட ஆசிரியர் எம்.எம்.எம். உவைஸ் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். நிசார் தலைமையில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டு விழாவில், சாய்ந்தமருது கோட்டக்கல்விப்பணிப்பாளர் என்.எம்.ஏ. மலிக் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் அதிபர் எம்.ஐ.சம்சுதீன், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். அதிபர் எம்.ஐ. இல்லியாஸ், கல்முனை அல்-ஸுஹறா அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதிய்யா, லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் பிரதி அதிபர் எஸ்.எம்.சுஜான் ஆகியோர் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொள்வதோடு, சேவைக்கான ஆசிரிய ஆலோசகர் (விஞ்ஞானம்) எம்.எஸ். சஹ்துல் அமீன் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கிறார்.