கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கரடிப்போக்கு உருத்திரபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
எதிர் எதிர் திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒரு பிள்ளையின் தாயார் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.