அரசுக்கு எதிராக நாளை வியாழக்கிழமை பொது பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும், அரச மற்றும் தனியார் பஸ்கள் வழமைப்போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரச போக்குவரத்து சேவைகள் உரிய முறையில் இடம்பெறும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் தாமும் நாளையதினம் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுன விஜயரத்ன தெரிவித்தார்.
எனினும் எதிர்வரும் 6ஆம் திகதி நடத்தப்படவுள்ள தேசிய நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு தமது சங்கம் ஆதரவளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.