அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை நாளை நடைபெறவுள்ள நிலையில் உலகின் மிகப்பெரிய பூட்டு, அயோத்திக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் நன்கொடைகளையும், பரிசுப் பொருள்களையும் அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் அலிகார் மாநிலம் நோரங்காபாத்தில் வசிக்கும் சத்ய பிரகாஷ் சர்மா மற்றும் அவரது மனைவி ருக்மணி ஷர்மா தம்பதியரால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 400 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூட்டு மற்றும் சாவி செய்யப்பட்டது.
சத்ய பிரகாஷ் சர்மா சமீபத்தில் காலமான நிலையில் இந்த பூட்டை அயோத்தி ராமர் கோவிலுக்குப் பரிசளிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்துள்ளது. அதன்படி இந்து மகா சபை சார்பில் இந்த பூட்டு அயோத்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
