அமெரிக்க விசாவுக்கு கொழும்பு சென்ற முதியவரைக் காணவில்லை!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்களுக்காக அமெரிக்க தூதரகத்திற்குச் சென்ற முதியவரை கொழும்பில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

23.10.2023 திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று அங்கு விசா அலுவல்களை நிறைவு செய்து விட்டு ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள விடுதி ஒன்றிற்கு உறவினர்களுடன் திரும்பிய முதியவர் அன்று பிற்பகல் 3 மணியளவில் கடைக்குச் செல்வதாக தெரிவித்து விடுதியிலிருந்து புறப்பட்டவர் இன்று வரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுதியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் போது இளம்கபில நிற சேட் மற்றும் வேட்டி அணிந்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0774354409 எனும் தொலைபேசி இலக்கத்திறகு அறிவிக்குமாறும் உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.

அமெரிக்க விசாவுக்கு கொழும்பு சென்ற முதியவரைக் காணவில்லை!

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்