நிதி மோசடிச் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் விசாரணைகளை எதிர்கொண்டு, மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன (வயது 78) திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு சிறைச்சாலை வளாகத்திற்குள் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது










