அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 337 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தகவல்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்று செவ்வாய்க்கிழமை 327.77 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், இன்று அது 327.99 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று 336.81 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 337 ரூபாவாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றங்கள் பதிவாகியுள்ளன.











