அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை நாட்டின் வர்த்தக வங்கிகளில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335 ரூபாய் முதல் 336 ரூபாய்க்கும் அதிகமான மட்டத்தில் பதிவாகியுள்ளது.
செலான் வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்று 327.30 ரூபாயிலிருந்து இன்று 327.40 ரூபாயாக அதிகரித்துள்ளது. விற்பனை விலையும் 336.55 ரூபாயிலிருந்து 336.65 ரூபாயாக உயர்ந்துள்ளது.
NDB வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 327.10 ரூபாயிலிருந்து 327.30 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், விற்பனை விலையும் 336.10 ரூபாயிலிருந்து 336.30 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மக்கள் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 327.61 ரூபாயிலிருந்து 327.66 ரூபாயாகவும், விற்பனை விலை 335.73 ரூபாயிலிருந்து 335.79 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை 325.58 ரூபாயிலிருந்து 325.83 ரூபாயாகவும், விற்பனை விலை 335.50 ரூபாயிலிருந்து 335.75 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.50 ரூபாயிலிருந்து 328 ரூபாயாகவும், விற்பனை விலை 335.50 ரூபாயிலிருந்து 336 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகளில் டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










