மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,400 ரூபாவாகவும் 400 கிராம் நிறையுடைய லங்கா சதொச பால்மாவின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 910 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.
வெள்ளை அரிசி கிலோ ஒன்று 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 200 ரூபாவாகவும் கீரி சம்பா கிலோவொன்று 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 258 ரூபாவாகும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்