நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அதிஅபாய மண்சரிவு எச்சரிக்கை (Level 3 – Red Alert) இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
பதுளை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தரையில் திடீர் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள், மின் கம்பங்கள் அல்லது வேலிகள் சரிதல், சுவர்களில் திடீர் விரிசல்கள் தோன்றுதல், திடீரென நீரூற்றுகள் தோன்றுதல் அல்லது ஏற்கனவே உள்ள நீரூற்றுகள் தடைப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு 117 என்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.