அட்சய திருதியை 2024

அட்சய திரிதியை 2024

அட்சய திருதியை 2024

💥இந்த ஆண்டு அட்சய திரிதியை மே 10ம் திகதி வருகிறது. இந்த ஆண்டு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் ரோகிணி நட்சத்திரத்துடன் சுகர்ம யோகமும் இணைந்து வருகிறது.

💥ஜோதிட ரீதியாகவும் இந்த நாளில் சுப கிரகங்கள் பலவும் ஒன்று கூடிய மங்கள யோகங்களை வழங்க உள்ளன. அதனால் இந்த நாளில் தவறவிடக் கூடாத மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

💥அட்சயம் என்றால் பூரணமானதுஅழியாத பலன் தரக்கூடியது என்பார்கள். வளருதல்’ என்றும் அர்த்தம் உண்டு. இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள்பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

💥அதனால் தான் அன்று தங்கம் வாங்கினால் மேலும் மேலும் வளரும் என்ற நோக்கில் தங்கத்தை மக்கள் வாங்குகின்றனர். இந்த நாளில் தங்கம், வெள்ளி மட்டும் தான் வாங்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. அதற்குப் பதிலாக அரிசிஇ உப்புஇ மஞ்சள்இ வலம்புரி சங்குஇ மண் பானைஇ சோழிஇ ஸ்ரீ யந்திரம் போன்றவற்றையும் வாங்கிக் கொள்ளலாம்.

அட்சய திருதியை 2024 திகதி

🔆இந்த ஆண்டு அட்சய திருதி மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4:17 மணிக்கு திரிதியை திதி தொடங்கி, மே 11ஆம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 2:50 மணிக்கு முடிவடைகிறது. உதயதிதியின் அடிப்படையில் மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அட்சய திதியை கொண்டாடப்படுகிறது.

🔆மகாலட்சுமிக்கு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் இந்த ஆண்டு அட்சய திரிதியை வருவதால் இது கூடுதல் சிறப்புடையதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது.

வழிபாடு

🔆அட்சய திருதியை அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டுஇ கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டின் பூஜை அறையிலோ விளக்கேற்றி மகாலட்சுமியையும்இ பெருமாளையும் வழிபட வேண்டும். மந்திரங்களை சொல்லி பூஜை செய்ய வேண்டும். பின்னர் தூபஇ தீப ஆராதனைகள் செய்ய வேண்டும் இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.

🔆அட்சய திரிதியை தினத்தன்று விநாயகரையும்இ லட்சுமியையும் வணங்கி புது விடயங்களை ஆரம்பிப்பது நன்மையாகும்.

அரிசி

🔺பச்சரிசி, பார்லி அரிசி ஆகியவற்றை இந்த நாளில் வாங்கி வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமானதாகும். பச்சரிசி வாங்காவிட்டாலும் வீட்டிக்கு சமையலுக்கு பயன்படுத்தும் அரிசியை கொஞ்சமாவது வாங்கி வீட்டில் வைக்க வேண்டும்.

மஞ்சள்

🔺மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் பொடி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வீட்டில் வாங்கி வைத்து வழிபடுவது சிறப்பானதாகும்.

உப்பு

🔺உப்பு மிக முக்கியமான மங்கள பொருளாகும். அனைத்து மங்கள நிகழ்ச்சிக்கும் முதலில் வாங்கி வைக்கும் பொருள் உப்பு தான். மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் அவளின் அருளை பெறுவதற்கு வீட்டில் உப்பு வாங்கி வைக்கலாம்.

மண் பானை

🔺அட்சய திரிதியை நாளில் தங்கம், வெள்ளி வாங்க முடியாதவர்கள் மண்ணால் செய்த பானை, அல்லது மண்ணால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பொருளை வீட்டில் வாங்கி வந்து வைத்தால் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து அந்த வீட்டில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் பல மடங்காக பெருக வைப்பாள் என்பது நம்பிக்கை.

சோழி

🔺சோழி சிறிதளவு வாங்கி வந்து மகாலட்சுமியின் படத்திற்கு அருகே, மகாலட்சுமியின் பாதத்திற்கு கீழ் வைத்து வழிபட வேண்டும். அடுத்த நாள், ஒரு சிவப்பு துணியில் அந்த சோழிகளை முடிந்து, பத்திரமாக பூஜை அறையில் அல்லது பீரோவில் வைக்கலாம். இதனால் வீட்டில் பொருளாதார நிலையும், செல்வ வளமும் உயர்ந்து கொண்டே செல்லும்.

அட்சய திரிதியை 2024

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்